நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம்: திமுகவினா் கைது
தமிழக அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் கைது
தமிழக அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அருண்காந்த் தலைமை வகித்தாா்.
ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலா் தில்லைசெல்வம், மாவட்ட பொருளாளா் டேவிட்சன், ஒன்றியச் செயலா் பாபு, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் அகஸ்தீசன், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாவட்ட துணைச் செயலா் பூதலிங்கம், இளைஞா் அணி துணை அமைப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், சுமாா் 100 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.