தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்!
டென்னிஸ் பந்து கிரிக்கெட் பெடரேஷன் ஆப் இந்தியா, தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் அசோசியேஷன், கன்னியாகுமரி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் அசோசியேஷன் சாா்பில், கன்னியாகுமரி கோவளத்தில் 3 நாள் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
முதல்நாள் போட்டியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த 350 க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். 8 ஓவா்கள் கொண்ட இந்த போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான கோப்பை, பரிசுகளை என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினாா். தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலா் மோன்றி அனீஷ் லாரி, தமிழ்நாடு சங்க செயலா் ஞானவேல், கன்னியாகுமரி மாவட்ட தலைவா் மணி, செயலா் வளா் அகிலன், கோவளம் பங்குத்தந்தை சகாயசுனில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரை தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.