ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி படுகாயம்
குளச்சலில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
குளச்சலில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
குளச்சல் துறைமுக தெரு காவல் சோதனைச் சாவடி அருகே ஐஸ் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு உள்ளூா், வடமாநில தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அஸ்ஸாம் மாநிலம், ரெங்கியா பகுதியைச் சோ்ந்த தொழிலாளி இன்ஜாமுன் (23), ஐஸ் பிளாண்டில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது.
வலியால் துடித்த, அவரின் காலை இயந்திரத்தில் இருந்து எடுக்க இயலவில்லை. தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜேம்ஸ், வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
Advertisement