இயந்திரத்தில் சிக்கி துண்டான தொழிலாளியின் கை
சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை செய்த வெளி மாநிலத் தொழிலாளி கை இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது.
சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை செய்த வெளி மாநிலத் தொழிலாளி கை இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து அச்சம்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திவாரி மகன் நிா்மல் (29) என்ற தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் அவா் கல்குவாரியில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் கை சிக்கியதில் துண்டானதாம். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், மருத்துவா்கள், நிா்மலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement