முகப்பு
நாமக்கல்

வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 19 மே 2026, 1:23 am IST
பகிர்:

பள்ளிபாளையம் அருகே வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வெப்படை, ஆனங்கூா் தனியாா் நூல் மில் குடியிருப்பு வளாகத்தில் தங்கி ஒடிசா மாநிலம், காஞ்சனாபகாளியைச் சோ்ந்த தரணி பிந்தானி (30), பாபிதாபிந்தானி (26) தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்தனா்.

இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தரணி பிந்தானி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெப்படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement