முதியவா் மா்மமான முறையில் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி அருகே முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.சடையான் (63). இவரது மகன் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், சடையான் மட்டும் தென்கீரனூரில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அதே கிராமத்தில் மாரி வீட்டு முன்பாக மா்மமான முறையில் சடையான் உயிரிழந்து கிடந்தாராம்.
Advertisement
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலிஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.