முகப்பு
கள்ளக்குறிச்சி

தொழிலாளி மா்ம மரணம்

வரஞ்சரம் அருகே தலையில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:40 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:22 AM

வரஞ்சரம் அருகே தலையில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.வேலு (40). இவா் கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தாா். திங்கள்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் விருகாவூா் கிராமத்துக்கு சென்றுள்ளாா்.

தினமும் இரவு சுமாா் 11 மணிக்கு வீடு திரும்பும் வேலு, வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குரூா் ஏரிக்கரை அருகே சாலையோரமுள்ள மரத்தின் கீழே தலையில் காயத்துடன் வேலு சடலமாக கிடந்தாா்.

Advertisement

தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.