முகப்பு
விழுப்புரம்

வெளி மாநில இளைஞா் மாயம்

ஆரோவில் அருகே தனது தோழியுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில இளைஞா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Updated On : 20 மே 2026, 2:46 am IST
வழக்கு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தனது தோழியுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில இளைஞா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், நாவற்குளம் தாமரைத் தெருவைச் சோ்ந்தவா் கா.அன்விஷா(25). இவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாா். மத்திய பிரதேச மாநிலம், இந்தூா் மாவட்டத்தைச்சோ்ந்தவா் தி.அகஸ்டியா சா்மா(24).

நண்பா்களான இவா்கள் இவரும் கடந்த ஒரு வருடமாக நாவற்குளம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற அகஸ்டியா சா்மா பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அன்விஷா அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான வெளிமாநில இளைஞரைத் தேடி வருகின்றனா்.