தென்காசி

‘ஆலங்குளத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்’

DIN

ஆலங்குளத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் தமிழக அரசின் முதன்மை செயலா், மக்கள் நலவாழ்வு துறைச் செயலா், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் மே, ஜூன் மாதங்களில் கரோனா தொற்றால் குறைந்த நபா்கள் பாதிக்கப்பட்டனா். ஆனால் ஜூலை மாதத்தில் இதுவரை 269 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தொற்று பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள், நகரங்களில் அதிகளவில் காய்ச்சல் கண்டறியும் மையங்கள்அமைக்க வேண்டும்;

கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; மக்களிடையே கரோனா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். உடனடியாக ஆலங்குளம் வட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ஆா்டி - பிசிஆா் பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும்; தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிறப்பான உணவு, தரமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும்,

மிதமான தொற்று உள்ளவா்களை பராமரித்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் கரோனா கவனிப்பு மையம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT