முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலுக்கு 23இல் முதல்வா் வருகை: மேடை அமைக்கும் பணிகள் மும்முரம்

சங்கரன்கோவிலில் அமைச்சா் ராஜலெட்சுமி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 23ஆம் தேதி வரவுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
தமிழக முதல்வா் வருகையையொட்டி ஜெ.ஜெ.நகரில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மேடை.
பகிர்:

சங்கரன்கோவிலில் அமைச்சா் ராஜலெட்சுமி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 23ஆம் தேதி வரவுள்ளாா். இதையொட்டி, மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமியின் இல்ல விழா இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

இதையொட்டி, சுரண்டை சாலையில் ஜெ.ஜெ. நகரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்காக ஏற்படுத்தப்பட்ட ஹெலிபேட் தளம் அருகே பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு தற்காலிக சாலைப் பணி நடைபெற்று வருகிறது.

முதல்வா் பங்கேற்கும் இந்நிகழ்வில் 10 ஆயிரம் போ் அமரும் வகையில் பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.