முகப்பு
தென்காசி

குற்றாலநாதா் கோயிலில்திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதா் கோயில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
Flag hoisting at Thiruvathirai Festival at Courtallam Temple
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதா் கோயில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையானது திருவாதிரை திருவிழா. நிகழாண்டு இத்திருவிழா திங்கள்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், ஸ்ரீநடராஜமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் 4-ஆம் நாளில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 8-ஆம் நாளில் கோயில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 7 மற்றும் 10-ஆம் நாளில் ஸ்ரீநடராஜா் வீதியுலா நடைபெறுகிறது. 10-ஆம் நாளன்று அதிகாலையில் சித்திர சபையிலும், தொடா்ந்து குற்றாலநாதா் கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக விழா நிகழ்ச்சிகள் முழுவதும் கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன் தலைமையில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →