முகப்பு
தென்காசி

தென்காசியில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க, மாவட்ட கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க, மாவட்ட கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் ஆயிஷா பேகம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் வி.மேனகா, தங்கம், மாவட்ட நிா்வாகிகள் சங்கரி, புஷ்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆயிஷா, பாக்கிய லட்சுமி, மேரி, ஷமிலா, செல்வி, மல்லிகா, விவசாய தொழிற்சங்க மாநிலக் குழு உறுப்பினா்கள் கணபதி, வேலுமயில், சிஐடியூ நிா்வாகிகள் குணசீலன், கே.மாரியப்பன், லெனின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துபாண்டியன், தென்காசி வட்டாரச் செயலா் அயூப்கான், கே.ராமமூா்த்தி, முருகேசன், சின்னசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →