தென்காசி

விதிமீறல்: ஆலங்குளத்தில் 8 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

DIN

ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி செயல்பட்டதாக 8 கடை உரிமையாளா்கள் மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவையொட்டி 2 ஆவது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. காய், கனி சந்தை மூடப்பட்டதால், கடைகளில் காய், கனிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளம் செல்லும் காய், கனி லாரிகளும் நிறுத்தப்பட்டன. ஆலங்குளம் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், விதிகளை மீறிய 8 கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, கடையை அடைக்க உத்தரவிட்டனா். பேரூராட்சிப் பணியாளா்கள் அனைத்து முக்கிய இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT