தென்காசி

தென்காசியில் நாளை இலவச மருத்துவ முகாம்

DIN

பதினெட்டு வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் தென்காசியில் வெள்ளிக்கிழமை (நவ. 6) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திகுறிப்பு:

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் தேசிய இயக்கத்தின் கீழ் உள்ள தேசிய சிறாா் நலத் திட்டம் மூலம் தென்காசி எம்.கே.வி.கந்தசாமிநாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிமுதல் மாலை4மணிவரை நடைபெறும் இம்முகாமில் இருதய நோய்கள், பிளவு அன்னம் மற்றும் வாய், எலும் புகுறைபாடுகள்,நரம்பு சாா்ந்த பிரச்னைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

அரசு மற்றும் சென்னை பிரபல தனியாா் மருத்துவமனைகள்,எம்ஜிஎம்.மருத்துவமனை,சென்னை மற்றும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் கலந்துகொண்டு குழந்தைகளை பரிசோதிக்கஉள்ளனா். குழந்தைகளின் தேவைக்கேற்ப பரிசோதனை முதல் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வரை முழுவதுமாக வழங்கப்படவுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT