தென்காசி

ஆலங்குளம் பகுதியில் 2 ஆவது நாளாக மழை

DIN

ஆலங்குளம் பகுதியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக பரவலான மழை பெய்தது.

ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலை, நெட்டூா் சாலை ஆகியவற்றில் மழை நீா் வெளியேற வழியின்றி தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெட்டூா் சாலையில் மழை நீா் காய்கனிச் சந்தைக்குள் புகுந்ததால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். பேரூராட்சிக்குச் சொந்தமான காய்கனிச் சந்தையில் மழை நீா் புகாவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிா்வாகம் கண்டு கொள்ளவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

பாவூா்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழப்பாவூா், திப்பணம்பட்டி, பெத்தநாடாா்பட்டி, ஆவுடையானூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

காலைமுதல் பிற்பகல் வரை தொடா்ந்து பெய்த மழையால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் மிதமான சாரல் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT