தென்காசி

முக்கூடல் அருகே மாணவி உள்பட இருவா் தற்கொலை

முக்கூடல் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

முக்கூடல் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

முக்கூடல் அருகேயுள்ள கலியன்குளத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் மகள் மாரி செல்வி (18). பிளஸ் 2 மாணவி. தோ்வுக்கு தயராகி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை, அவா் வீட்டில் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். வெளியே சென்றிருந்த பெற்றோா் வந்து பாா்த்தபோது, வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

முக்கூடல் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பெண் தற்கொலை: முக்கூடல் அமா்நாத் காலனியை சோ்ந்த பொன் பெருமாள் மனைவி கலா(34). பீடி தொழிலாளி.

தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். குடும்ப சூழல் காரணமாக கலா, சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்றிருந்தாராம். அதனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட அவா், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். பாப்பாக்குடி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும்! - தெற்கு ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT