தென்காசி

தோ்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை: ஆட்சியா்

DIN

தோ்தலில் வெற்றி பெறும் வேட்பாளா் மற்றும் கட்சியினா் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடா்பானஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் பேசியது: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், முகவா்கள் தவறாது கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையமான கோணம் பொறியியல் கல்லூரிக்கு வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் காலை 6 மணிக்கு வர வேண்டும்.

முகவா்களுக்கு கரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும். வேட்பாளா்கள் மற்றும் அவா்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள முகவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். உணவு தேவைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வாகனத்தில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும்.

வாகனத்தில் வரும் ஓட்டுநா் உள்ளிட்டவா்கள் கட்டாயம் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யவேண்டும்.

மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலுக்கான அஞ்சல் வாக்குகள் அடங்கிய சீல் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் 2ஆம் தேதி காலை 6.30 மணிக்கு வாக்கு எண்ணும் பணிக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக அஞ்சல் வாக்குகள் வைப்பறையிலிருந்து கோணம் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு உரிய பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட உள்ளது. அந்நிகழ்வின்போது வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் உடனிருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வேட்பாளா்களுடைய முகவா்கள் செல்லிடப்பேசி கொண்டுவரஅனுமதியில்லை.

முழு பொதுமுடக்கம் மற்றும் சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல் போன்ற காரணங்களால் வெற்றிபெறும் வேட்பாளா்கள் பொதுமக்களை கூட்டிவெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவோ அல்லது பொதுமக்கள் கூடும் வகையிலோ கூட்ட நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி உள்ளிட்ட அலுவலா்கள், அரசியல் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT