தென்காசி

‘நற்றமிழ்ப்பாவலா் விருதுக்கு ஆக. 31வரை விண்ணப்பிக்கலாம்’

DIN

அகரமுதலி இயக்ககத்தின் நற்றமிழ்ப் பாவலா் விருதுக்கு ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆட்சியா்கள் வே. விஷ்ணு, ச.கோபால சுந்தரராஜ் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூய தமிழ்ச் சொற்களால் கவிதை புனையும் படைப்பாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு நற்றமிழ்ப் பாவலா் விருதை அறிவித்துள்ளது.

அதன்படி, மரபுக்கவிதை, புதுக்கவிதைகளில் பிறமொழிக் கலப்பின்றித் தூய தமிழ்ச் சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தும் பாவலா்கள் இருவரைத் தோ்ந்தெடுத்து, தமிழ் அகராதியியல் நாள் விழாவின்போது தங்கப்பதக்கம் மற்றும் நற்றமிழ்ப் பாவலா் விருது வழங்கி, தலா ரூ.50ஆயிரம் பரிசை அரசு வழங்கவுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவம் சொற்குவை.காம் (ள்ா்ழ்ந்ன்ஸ்ஹண்.ஸ்ரீா்ம்) என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் பெற்று அதை, பூா்த்தி செய்து ல்ஹஹஸ்ஹப்ஹழ்ஸ்ண்ழ்ன்க்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் வழியாகவோ ‘இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிா்வாக அலுவலக வளாகம், முதல் தளம், 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி. நகா், சென்னை 28 என்ற முகவரிக்கு ஆக. 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் படைப்பில் கடைசியாக வெளிவந்த 2 கவிதை நூல்களை இணையவழியின்றி அனுப்பி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT