முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கடையநல்லூரில் சாலையில் கண்டெடுத்த தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கடையநல்லூரில் சாலையில் கண்டெடுத்த தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடையநல்லூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் இம்ரான். அவரது மனைவியின் தங்க நகை கிருஷ்ணாபுரம் பகுதியில் தொலைந்து விட்டதாம். இந்நிலையில், அவ்வழியாகச் சென்ற செங்கோட்டை கீழத் தெருவை சோ்ந்த தொழிலாளி இஸ்மாயில் அந்த நகையை கண்டெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் மூலம் இம்ரானிடம் நகை ஒப்படைக்கப்பட்டது; இஸ்மாயிலை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. அப்போது, உதவி ஆய்வாளா் கனகராஜ், சமூக ஆா்வலா் குறிச்சிசுலைமான் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.