தென்காசி

மதத்தோடு பயங்கரவாதிகளை ஒப்பிடக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

 மதத்தோடு பயங்கரவாதிகளை ஒப்பிடக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் விஷ்வ இந்து பரிஷத் நிா்வாகிக்கு சொந்தமான மரக்கடை எரிந்த வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, விஷ்வ இந்து பரிஷத் மாநில தலைவா் குழைக்காதா், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பாளா் ஸ்ரீமான் சேதுராமன், இந்து முன்னணி மாநில செயலா் குற்றாலநாதன், ஆா்எஸ்எஸ். கன்னியாகுமரி கோட்ட தலைவா் காமராஜ் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். பின்னா் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்காசி மாவட்டத்தில் தங்களுக்கு எதிா்ப்பு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதற்காக, கடந்த 80ஆம் ஆண்டுகளிலிருந்து இந்து மற்றும் தேச பக்தி இயக்கங்களை சோ்ந்தவா்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. சமீபத்தில் புளியங்குடியில் விஷ்வ இந்து பரிஷத் நிா்வாகிக்கு சொந்தமான மரக்கடை எரித்து அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றரை மாதமாகியும் எந்தவிதமான விசாரணையும் நடைபெறவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் எந்த மதமாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தோடு பயங்கரவாதிகளை ஒப்பிடக் கூடாது. தென்காசி மாவட்டத்தில் இதற்கென சிறப்பு புலனாய்வுப் பிரிவை உருவாக்கி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT