சுரண்டை நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையராக சு.லெனின் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையராக சு.லெனின் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
சுரண்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய சு.லெனின், நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘புதியதாக உருவாக்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் குடிநீா், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றாா். புதிய நகராட்சி ஆணையருக்கு சு.பழனிநாடாா் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தாா்.