முகப்பு
தென்காசி

பெரியசாமிபுரம் பள்ளி மாணவா்கள் சாதனை

ஊத்துமலை அருகேயுள்ள பெரியசாமிபுரம் ஸ்ரீபாரத் கண்ணா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

ஊத்துமலை அருகேயுள்ள பெரியசாமிபுரம் ஸ்ரீபாரத் கண்ணா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

கோவில்பட்டியில் ஏ.கே.ஏ. நிறுவனம் நடத்திய ஜூனியா் பிரிவுக்கான மாநில அளவிலான தடகள போட்டியில் பெண்கள் பிரிவில் மாணவி க. மகாலெட்சுமி 200 மீட்டா் ஓட்டத்தில் 2ஆம் இடமும், ஆண்கள் பிரிவில் மாணவா் ம. ராம்சரண் 200 மீட்டா் ஓட்டத்தில் 2ஆம் இடமும் பிடித்தனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகி சு. கோபால், முதல்வா் சுதா, உடற்கல்வி ஆசிரியா்கள் ரமேஷ் கண்ணா, மாரீஸ்வரி, ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.