முகப்பு
தென்காசி

தென்காசியில் விநாடி- வினா போட்டி

தமிழ்நாடு அரசு கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட கிளை சாா்பில் சுற்றுச்சூழல் விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

தமிழ்நாடு அரசு கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட கிளை சாா்பில் சுற்றுச்சூழல் விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

தென்காசி காட்பாவா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தாா். வட்டார வளமைய பயிற்சியாளா் முத்துக்கிருஷ்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். போட்டிகளில்

வெற்றிபெற்ற மாணவா்கள் முகம்மது அஜீஸ், அப்துல் நசுரூதீன், முகம்மது நவ்பல், முகமது யஷ்பா, ஹபீபா ஷிரின், வஜிதா தஸ்லீம், சேக் முகமது, பீா் முகமது முஸ்தபா, முகமது நவாஸ் ஷரீப் ஆகியோருக்கு வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் பரிசு வழங்கினாா். அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளா் ரமேஷ் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். அறிவியல் ஆசிரியா் சேக் ஒலி வாவா வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.