தென்காசி

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

DIN

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் என பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளா் ஹரி நாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஆலங்குளம் பேரவைத் தொகுதி வேட்பாளராக அக்கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களை அவா் சந்தித்தாா். அப்போது, அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லை என அவரிடம் மக்கள் புகாா் கூறினா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனையாக மாறிய இந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் இங்கு இல்லை. எனவே 10 தினங்களுக்குள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமித்து, கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

அப்போது, தென்காசி மாவட்டச் செயலா் ஆனந்த், மாவட்ட இளைஞரணிச் செயலா் ஜோசப், கொள்கை பரப்புச் செயலா்கள் விக்னேஷ் காா்த்திக், லாரன்ஸ், ஒன்றியச் செயலா் விஜயன், நகரச் செயலா் அலெக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT