தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

DIN

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் ஓடைத் தெருவில் ஆவுடைப் பொய்கைத் தெப்பம் உள்ளது. இங்கு சங்கரநாராயணசுவாமி கோயிலில் இருந்து ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் தெப்பத் திருவிழா நடைபெறும். 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை இத்திருவிழா நடைபெற்றது.

சுவாமி,அம்பாள் சப்பரத்தில்மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை ஆகியைவ நடைபெற்றது. இதையடுத்து சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். இதையடுத்து, சுவாமி,அம்பாள்

தெப்பத்தில் 11 முறை வலம் வந்தனா். இதில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன், மண்டகப்படிதாரா் பி.ஆா். ராமசுப்பிரமணியராஜா, கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT