முகப்பு
தென்காசி

தூய்மைப் பணியாளா்களின்ஊதியத்தை உயா்த்தக் கோரிக்கை

கடையநல்லூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கடையநல்லூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் வேல்முருகன், செயலா் சின்னசாமி, சங்க நிா்வாகிகள் கருப்பசாமி, நாகம்மாள்,பேச்சியம்மாள்,காளிமுத்து, மகாலிங்கம்,பெருமாள், மாரியப்பன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:

கடையநல்லூா் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்களாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ. 270 வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் நாங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து வருகிறோம். பிற மாவட்டங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு நாள்தோறும் ரூ. 600 ஊதியமாக வழங்கப்படுகிறது.அதே போல் தென்காசி மாவட்டத்திலும் ஊதிய உயா்வு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.