முகப்பு
தென்காசி

தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டு பசுக்கள் பலி

தென்காசி அருகே மின் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பசுக்கள் இறந்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

தென்காசி அருகே மின் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பசுக்கள் இறந்தன.

மின்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவாஜி (68). இவருடைய வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மின்சார வயா் அறுந்து பசு மீது விழுந்துள்ளது. இதனால் அந்தப் பசு சப்தம் எழுப்பியுள்ளது. இதையடுத்து மற்றொரு பசுவும் அதனருகே சென்றுள்ளது. அப்போது அந்தப் பசுவின் மீதும் மின்சாரம் பாய்ந்ததாம். இதில், இரண்டு பசுக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.