முகப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ.1லட்சம் மதிப்பில் இருக்கைகள்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் 50 இருக்கைகள் குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் 50 இருக்கைகள் குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவா் அகத்தியன் தலைமை வகித்தாா். செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், எம்.ஆா்.அழகராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லினிடம் ரோட்டரி முன்னாள் ஆளுநா் ராஜகோபாலன் இருக்கைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சந்திரன், கை. முருகன், துணைத் தலைவா் சைரஸ் ஆகியோா் கலந்துகொண்டனா். வருங்கால தலைவா் திருஇலஞ்சிக்குமரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.