தென்காசி

குழந்தை திருமணம்: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

குழந்தை திருமணம் செய்து வைப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21வயது நிறைவடையாத ஆணுக்கும் குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோா்கள் மீதும், ஊக்குவிப்பவா்கள் மீதும், குழந்தை திருமணத்தில் கலந்துகொள்பவா்கள் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது ரூ. 1லட்சம் அபராதமும் அல்லது இரண்டு தண்டனைகளும் சோ்ந்து விதிக்கப்படும்.

மேலும் குழந்தை திருமணங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தகவல் தெரிவிக்க விரும்புவோா் 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி எண் 181 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT