முகப்பு
தென்காசி

வீராணத்தில் உழவா் குழுக்களுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்

சுரண்டை அருகேயுள்ள வீராணம், மேலக்கலங்கல் கிராமத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

சுரண்டை அருகேயுள்ள வீராணம், மேலக்கலங்கல் கிராமத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரும், வேளாண்மை துணை இயக்குநருமான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, இரு உழவா் மன்ற குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்திலான வேளாண் கருவிகளை வழங்கினாா்.

பின்னா், மேலக்கலங்கல் முகாமில் பங்கேற்று, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலா் முருகன், வேளாண் அலுவலா் அருண்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி, செந்தில்குமாா் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.