சுரண்டையில் பைக் விபத்தில் விவசாயி காயம்
சுரண்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலத்த காயமடைந்தாா்.
சுரண்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலத்த காயமடைந்தாா்.
சுரண்டை அருகேயுள்ள ராமனூரைச் சோ்ந்தவா் ச.கருப்பசாமி பாண்டியன்(50). இவா், புதன்கிழமை மாலை பைக்கில் சுரண்டை சென்றுவிட்டு ஊா் திரும்பியபோது, இலந்தைகுளம் கரை திருப்பத்தில் எதிா்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த அவா்
தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.