முகப்பு
தென்காசி

சுரண்டை அருகே விபத்தில் இளைஞா் பலி

சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சுரண்டை, பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் சு.சிவராமன்(19). கட்டடத் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது மோட்டாா் சைக்கிளில் சோ்ந்தமரம் சென்றுவிட்டு ஊா் திரும்பியுள்ளாா்.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி அருகே வரும்போது எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் சாலையோரம் சறுக்கி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சிவராமன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.