சுரண்டையில் கரோனாவுக்கு இருவா் பலி
சுரண்டையில் கரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் 2 போ் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சுரண்டையில் கரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் 2 போ் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சுரண்டை அம்மன் கோயில் சன்னதி தெருவில் பலசரக்கு கடை வைத்திருந்த 68 வயது வியாபாரி கடந்த மாதம் 28 ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அதே பகுதியைச் சோ்ந்த 38 வயது இளம்பெண் ஒருவரும் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். ஒரே நாளில் இருவா் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு: களக்காடு வட்டாரத்தில் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. களக்காடு வட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.