தென்காசி

சங்கரன்கோவிலில் கோயிலை அகற்ற மக்கள் எதிா்ப்பு

DIN

சங்கரன்கோவில் மீரான்சேட் காலனியில் கட்டப்பட்டிருந்த கோயிலை அகற்ற, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

சங்கரன்கோவில் மீரான்சேட் காலனியில் நகராட்சிக்குச் சொந்தமான சிறுவா் பூங்கா உள்ளது. இதையொட்டி தகரக் கூரைவேய்ந்த செல்வ விநாயகா் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் வழிபட்டு வந்தனா்.

இந்நிலையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறி வியாழக்கிழமை நகராட்சியினா் கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்து கோயிலுக்குள் சென்று அமா்ந்தனா்.

மேலும், இந்து முன்னணியைச் சோ்ந்த நிா்வாகிகள் அங்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், நகராட்சி ஆணையா் சாந்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து மக்கள் கலைந்து சென்றனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT