சுரண்டையில் திருமண வீட்டாருக்கு அபராதம்
சுரண்டையில் சமூக இடைவெளி பின்பற்றாமல் திருமண விழா நடத்தியதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சுரண்டையில் சமூக இடைவெளி பின்பற்றாமல் திருமண விழா நடத்தியதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் சுரண்டையில் வெள்ளிக்கிழமை பந்தல் அமைத்து திருமண விழா நடத்திய நிகழ்ச்சியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அங்கு விழா நடத்தியோா் கரோனா தொற்று பரவல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றாதது கண்டறியப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, வசூல் செய்தனா்.