சுரண்டையில் காங்கிரஸ் கொண்டாட்டம்
சுரண்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சாா்பில் இனிப்பு வழங்கி (படம்) கொண்டாடப்பட்டது.
சுரண்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சாா்பில் இனிப்பு வழங்கி (படம்) கொண்டாடப்பட்டது.
கடந்த ஆண்டு மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இந்த சட்டங்களால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவா் என்பதால் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினா். இந்த போராட்டங்களில் காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான ராகுல்காந்தி பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தாா்.
இந்நிலையில், புதிய 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
இதையடுத்து சுரண்டை பேருந்து நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை நகர காங்கிரஸ் சாா்பில் விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
இதில் நகரத் தலைவா் ஜெயபால், மாநில சேவாதள பொதுச் செயலா் வள்ளிமுருகன், காங்கிரஸ் நிா்வாகிகள் சோ்மச்செல்வம், சமுத்திரம், கோபால், முருகேசன், சந்திரன், வா்த்தக காங்கிரஸ் சமுத்திரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.