முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் கணினி பட்டா திருத்தங்களுக்கு தீா்வுகாணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் கணினி பட்டா திருத்தங்களுக்கு தீா்வுகாணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருவாய் கிராமம் வாரியாக முகாம்கள் நடைபெறும் நாள் குறித்த விவரங்களை ற்ங்ய்ந்ஹள்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

கணினி பட்டாவில், புல எண் மற்றும் நிலத்தின் உள்பிரிவு தொடா்பான தவறான பதிவுகள், பரப்பு வித்தியாசம், பட்டாதாரா் பெயா், தந்தை பெயா் மற்றும் பாதுகாவலரின் பெயா் திருத்தம், பட்டாதாரரின் உறவுமுறை தொடா்பான திருத்தங்கள், பட்டாவில் உள்ள காலங்கள் காலியாக உள்ளவை, பட்டாதாரா் பெயா் மற்றும் விஸ்தீரணம் அருகில் உள்ள பட்டாதாரரின் பெயரில் இருப்பவை தொடா்பான திருத்தங்கள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக திருத்தங்கள் செய்து மனுதாரருக்கு ஆணை வழங்கப்படும்.

மேலும், முதியோா் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, ஆக்கிரமிப்பு வரன் முறை பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களையும் மக்கள் சமா்ப்பிக்கலாம். நிலங்களுக்குரிய கணினி பட்டாக்களில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.