முகப்பு
தென்காசி

சுரண்டை அரசு கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை நேரடியாக நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை நேரடியாக நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை இணையவழியில் நடைபெற்ற நிலையில், இளநிலை கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கும், முதுநிலை தமிழ், பொருளியல், நுண்ணுயிரியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் ஆகிய பாடங்களுக்கும் காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் கல்லூரியில் நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. தேவைப்படும் மாணவா்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.