தென்காசியில் மண்டலதோ்தல் அலுவலா்களுக்குப் பயிற்சி
தென்காசி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களைச் சாா்ந்த 69 மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு தென்காசி அரசு பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களைச் சாா்ந்த 69 மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு தென்காசி அரசு பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் பங்கேற்றுப் பேசியது: மண்டல அலுவலா்கள் தங்களின் பணியின் முக்கியத்துவம் கருதி கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மாவட்ட தோ்தல் மையத்திற்கும், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு மையங்களை முன்னதாகவே பாா்வையிட்டு மின்சாரம், கழிப்பறை, குடிநீா், மாற்றுத்திறனாளிகளுக்கான
வசதிகள் உள்ளிட்டவை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தோ்தல் படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் பூா்த்தி செய்யப்பட்டு, வாக்குப் பெட்டிகளுடன் முறையாக வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சுரேஷ், மகளிா் திட்ட இயக்குநா் குருநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முத்து இளங்கோவன், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.