ஆலங்குளம் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவரை கட்சியில் இருந்து நீக்க வலியுறுத்தல்
ஆலங்குளம் நதக காங்கிரஸ் முன்னாள் தலைவரை கட்சியில் இருந்து நீக்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலங்குளம் நதக காங்கிரஸ் முன்னாள் தலைவரை கட்சியில் இருந்து நீக்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருநெல்வேலி - தென்காசி நான்குவழி சாலைப் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆலங்குளம், பாவூா்சத்திரம் ஆகிய பகுதிகளில் இந்த சாலையால் பாதிப்புக்குள்ளாகும் கடை மற்றும் நில உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நான்கு வழிச்சாலையால் பாதிப்புக்குள்ளாகும் ஆலங்குளம் பேருந்து நிலையம் எதிரே உள்ள காமராஜா் சிலையை அருகே உள்ள வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு அதிகாரிகள் தரப்பில் சிலைக்கு இழப்பீடாக அருமைநாயகம் என்ற காங்கிரஸ் பிரமுகா் வங்கி கணக்கில் மாா்ச் 22 ஆம் தேதி ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டு விட்டதால், சிலை வைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்து விட்டனா்.
இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அருமைநாயகத்தை கட்சியில் இருந்து நீக்க வட்டார காங்கிரஸ் தலைவா் அலெக்சாண்டா், மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்.எல்.ஏ. விடம் பரிந்துரைத்துள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ ராமசுப்பு செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.