குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளியில் தீ தொண்டு வார விழா
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் , தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் , தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது.
பள்ளித் தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தாா். பள்ளியின் சட்ட ஆலோசகா் திருமலை, பள்ளி இயக்குநா் வழக்குரைஞா் மிராக்ளின் பால் சுசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றாா்.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் தென்காசி மாவட்ட அலுவலா் கவிதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தீ விபத்தை தவிா்ப்பதற்கான எளிய வழிமுறைகள் குறித்துப் பேசினாா். உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கணேசன், தென்காசி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரமேஷ், நிலைய வீரா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.