முகப்பு
தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம்

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மேல்நிலைப் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மேல்நிலைப் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவி ஹரிணி இறைவணக்கப் பாடல் பாடினாா். காயத்ரி செய்தி வாசித்தாா். தனீஸ் குரான் வாசித்தாா். பத்தாம் வகுப்பு மாணவா்களின் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு மாணவி மரியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். மாணவி ரக்ஷானா, ரம்ஜான் நற்செயல்கள் குறித்து பேசினாா். காா்த்தி உறுதிமொழி எடுத்தாா். சந்தியப்பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். திவ்யா வரவேற்றாா். மாணவி அனுபாமா நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் இராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.