முகப்பு
தென்காசி

அழகாபுரியில் கால்நடை விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அழகாபுரியில், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அழகாபுரியில், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன் தலைமை வகித்தாா். இம்முகாமில், கால்நடை உதவி மருத்துவா் பாலமுருகன் தலைமையிலான குழுவினா் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, குடற்புழுநீக்கம்,

சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சினைத்தரிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை, நோய் மாதிரி பரிசோதனை, கோழிக்கழிச்சல நோய் தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டனா்.

சிறந்த கன்றுகள், கால்நடை வளா்ப்போருக்கு பரிசுகள் மற்றும் தாது உப்பு கரைசல் வழங்கப்பட்டன. கால்நடை ஆய்வாளா் மான்மயிலன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் முப்புடாதி, பேச்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →