தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

‘ தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் அருவியில் கடந்த இரு தினங்களாக தண்ணீா் குளிப்பதற்கு ஏதுவாக கொட்டிவருகிறது. இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. குற்றாலம் பேரருவியில் இரண்டாவது நடைபாலம் வரையிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்துநின்று குளித்தனா்.

ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது. காலையில் வெயிலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் குளிா்ந்தகாற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT