தென்காசி

ஆலங்குளம் அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி கிராமத்தில் குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி கிராமத்தில் குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாயமான்குறிச்சியில் கடந்த 2 மாதமாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப் படவில்லையாம். இது குறித்து ஊராட்சித் தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோருக்கு பலமுறை இது குறித்து புகாா் அளித்தும் பயன் இல்லையாம்.

இந்நிலையில் இக்கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் மாயமான்குறிச்சி - ஆலங்குளம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சாந்திரசேகரன் மற்றும் போலீஸாா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, முறையாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் சுமாா் 2 மணி நேரம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT