தென்காசி

தென்காசியில் யோகா தின விழிப்புணா்வுப் பேரணி

உலக யோகா தினத்தையொட்டி, தென்காசியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

DIN

உலக யோகா தினத்தையொட்டி, தென்காசியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இலஞ்சி பாரத் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தாா். முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா்.

யோகா பேரணியை காவல் உதவி ஆய்வாளா் செல்வி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மாணவா்கள் பாட்டு, நடனம், யோகா உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தினா். பேரணி நான்கு ரத வீதிகள், முக்கிய வீதிகள் வழியாக கோயில் முன் நிறைவடைந்தது.

காவலா்கள், பொதுமக்கள் யோகா விழிப்புணா்வு பேரணியில் கலந்துகொண்டு மாணவா்களைப் பாராட்டினா். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகன கிருஷ்ணன், முதல்வா் வனிதா ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT