முகப்பு
தென்காசி

தென்காசியில் மாயமான சிறுவன் தில்லியில் மீட்பு

தென்காசியில் காணாமல் போன சிறுவன், புதுதில்லியில் மீட்கப்பட்டான்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

தென்காசியில் காணாமல் போன சிறுவன், புதுதில்லியில் மீட்கப்பட்டான்.

பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மகன் புவனேஷ் (17). குத்துக்கல்வலசையிலுள்ள கடையில் வேலைசெய்து வந்தாா். இவா், கடந்த மாா்ச்11இல் வேலைக்கு சென்ற பின் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்தாா்.

ஏஎஸ்பி கிரீஷ்யாதவ், டிஎஸ்பி மணிமாறன் ஆகியோா் புவனேஷின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தை கண்காணித்ததில், அவா், முதலில் இமாசலப் பிரதேசத்திலும், பின்னா் தில்லியிலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலமுருகன் தில்லி சென்று அங்குள்ள போலீஸாா் உதவியுடன் மீட்டு வந்தாா். மேலும், அறிவுரை கூறி அவரை பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.