முகப்பு
தென்காசி

‘ஊா்க்காவல் படை பதவிகளுக்கு 20-க்குள் விண்ணப்பிக்கலாம்’

தென்காசி மாவட்ட ஊா்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி ஆகிய பதவிகளுக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

தென்காசி மாவட்ட ஊா்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி ஆகிய பதவிகளுக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. கிருஷ்ணராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட ஊா்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி, துணைத் தளபதி பதவிகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தோராகவும், வயது வரம்பு 21 முதல் 50-க்குள்ளும் இருக்க வேண்டும். இது கௌரவப் பதவி என்பதால் ஊதியம் வழங்கப்படாது. தேசிய மாணவா் படையில் பயிற்சிபெற்ற விரிவுரையாளா்கள், ஆசிரியா்கள், மருத்துவா்கள், உயா் பதவி வகிப்போா் வட்டார தளபதி பதவியில் சோ்ந்து தொண்டு செய்ய விருப்பம், சேவை மனப்பான்மை உடைய ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிகளுக்கு சுயவிவரக் குறிப்புடன் ‘காவல் கண்காணிப்பாளா், தென்காசி மாவட்டம்’ என்ற முகவரிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.