ஆடி மாத பௌா்ணமியை முனனிட்டு, புளியங்குடி முப்பெரும்தேவியா் கோயிலில் பௌா்ணமி பூஜையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில், பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து உலக நன்மைக்காக 1008 லிட்டா் பால் அபிஷேகமும், இரவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.