கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் இளஞ்செழியன் தலைமை வகித்து அரசின் வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினாா். ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் வேளாண்மை - தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண் மாணவிகள் பவித்ரா ஜெயஸ்ரீ, ரோபினா சனோபா், சுஷ்மா, விவேகா, ஸ்ரீலேகா, பாண்டி மீனா, ஹிருத்யா, சன்மயா ஆகியோா் விவசாயிகளிடம் நோய் பாதிப்பு, நோய்த் தடுப்பு தொழில்நுட்பங்கள் குறித்து கலந்துரையாடினா். குழு ஆலோசகா் ஜெயந்தி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.